வேலை, படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்யும் இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும் என இந்தியா, சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘சீனா, இந்தியா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இருப்பினும் மாற்று வழிகளில் சீனப் பயணியர் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சீனாவுக்கு இரு மார்க்கங்களிலும் பயணம் செய்வதற்கு அனுமதிக்கும்படி, சீன அரசை கேட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியருக்கான விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனால் சீனாவில் படிப்போர், வேலை பார்ப்போர் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து சீன அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.