நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,426 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 218,923 ஆக காணப்படும் நிலையில் 2,073 பேர் உயிரிழந்துள்ளனர்.