இங்கிலாந்தில் தற்போதைய கொரோனா வைரஸ் விதிகள், இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக ஜூன் 21ஆம் திகதி இங்கிலாந்தில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது சமூக தொடர்பு மீதான அனைத்து சட்ட கட்டுப்பாடுகளையும் நீக்குவதை தாமதப்படுத்தும் முடிவில் மூத்த அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன்போது, விளையாட்டு, பப்கள் மற்றும் சினிமாக்களுக்கான திறன் வரம்புகள் இருக்கும். மேலும் இரவு விடுதிகள் மூடப்பட்டிருக்கும்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பின்னர் ஒரு செய்தி மாநாட்டில் உறுதிப்படுத்த உள்ளார்.
பல விஞ்ஞானிகள் டெல்டா மாறுபாட்டின் அதிகரித்து வரும் தொற்றுகளுக்கு இடையே அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடவும், இரண்டாவது அளவைப் பெறவும் மீண்டும் திறக்க தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.