வேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முதல் கொவிட்-19 தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக, பப்ளிக் ஹெல்த் வேல்ஸ் தெரிவித்துள்ளது.
இது வேல்ஸ் அரசாங்கம் திட்டமிட்ட ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்ட புதிய தரவுகளின் படி, 2,213,050 பேருக்கு முதல் தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகையில் 70.2 சதவீதமாகும்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு உலக நாட்டையும் விட வேல்ஸின் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னிலையில் உள்ளது.
முதல் தடுப்பூசி கொடுக்கப்பட்ட மொத்த மக்கள் தொகையில் வேல்ஸ் மற்ற பிரித்தானிய நாடுகளை விட முன்னணியில் உள்ளது.
டெல்டா மாறுபாட்டின் பரவல் குறித்த கவலைகளுக்கு மத்தியில் கிளினிக்குகள் இப்போது இரண்டாவது அளவை துரிதப்படுத்துகின்றன.