மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும் இதன்போது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.