இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார்.
மேலும் இது ஒரு கடன் தொகை அல்ல எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த நிதி கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் ஒகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்கப்படுவதாகவும் சந்திரநாத் அமரசேகர கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனொன்றைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் சந்திரநாத் அமரசேகர குறிப்பிட்டார்.