இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 284 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 464 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 32 ஆயிரத்து 955 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.