இந்தியாவில் மக்களுக்கு பயன்படுத்துகின்ற இரண்டு தடுப்பூசிகளின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு, தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் மற்றும் ‘சீரம்’ நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளே தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அதாவது தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து ஒரு ‘டோஸ்’ தடுப்பூசியை 150 ரூபாய்க்கு மத்திய அரசு வாங்குகிறது.
இவ்வாறு வாங்குகின்ற தடுப்பூசிகளை, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகின்றமையினால் மத்திய அரசுக்கு கூடுதல் செலவாகிறது.
ஆகையினால் தடுப்பூசியின் விலையை குறைப்பது தொடர்பில் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.