அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் சுமார் 29,960 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான, கடுமையான நோயில் இருந்து 100 சதவீதம் பாதுகாக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நோவாவேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த தடுப்பூசியை இருப்பு வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம்.
2021ஆம் ஆண்டின் மூன்றாலம் காலாண்டில் அனுமதி பெற்று விடுவோம். காலாண்டு இறுதியில் மாதத்திற்கு 10 கோடி டோஸ்களும், ஆண்டு இறுதி காலண்டிற்குள் மாதத்திற்கு 15 கோடி டோஸ்கள் தயாரிக்க முடியும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஃபைஸர், மொடர்னா, ஜோன்சன் அண்ட் ஜோன்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகள் அவசர கால பயன்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவில் தடுப்பூசிக்கான தேவை பலமடங்கு குறைந்துள்ளது.
ஆகையால், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தவுடன், வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.