இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, புதிதாக 60 ஆயிரத்து 471 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 95 இலட்சத்து 70 ஆயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் 2 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 77ஆயிரத்து 031 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 24 மணிநேரத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 82 இலட்சத்து 80 ஆயிரத்து 472 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 9 இலட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தடுப்பூசி, இதுவரை 25 கோடியே 90 இலட்சத்து 44 ஆயிரத்து 072 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.