தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
நாளை புதன்கிழமை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது.
முக்கியமாக, புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக குறித்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சந்திப்பைத் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் இன்று அறிவித்துள்ளமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.