தமிழகத்திற்கு இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி தேவைப்படுவதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனாவால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முக்கிய காரணியாக இருப்பது தடுப்பூசி தான்.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 5.68 கோடி தகுதியான நபர்கள் உள்ளனர். இதுவரை 1.66 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்னும் 2 டோஸ் தடுப்பூசிக்கும் சேர்த்து 10 கோடிக்கு மேல் தடுப்பூசி கிடைத்தால் தான், ஒட்டுமொத்த மக்களுக்கும் முழுமையாக தடுப்பூசிபோட முடியும். தேவையான ஊசியை மத்திய அரசிடம் கேட்டு பெறுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.