மலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மலேசியாவில் ஆறு இலட்சத்து 935பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 38ஆவது நாடாக விளங்கும் மலேசியாவில் இதுவரை ஆறு இலட்சத்து 73ஆயிரத்து 26பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நான்காயிரத்து 142பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 150பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 73பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 67ஆயிரத்து 949பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 924பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.