யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த பெண்ணொருவர் (வயது 60) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த 60 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.