திருச்சி மத்திய சிறைசாலையிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள், தொடர் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) 10ஆவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அவர்கள், உடனடியாக தங்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்.
இந்நிலையில் எங்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசு எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை காலம் மேற்கொள்ளவில்லை.
ஆகவே எங்களை விடுதலை செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 78 பேர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.