2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் நேற்று குழுநிலைப் போட்டிகளின் இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
தேசிய அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், உக்ரேன் மற்றும் வட மெசிடோனியா அணிகள் மோதின.
குழு ‘சி’யில் நடைபெற்ற இப்போட்டியில், உக்ரேன் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் உக்ரேன் அணி சார்பில், ஹென்ரி யார்மலென்கோ 29ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ரோமன் யாரெம்சுக் 34ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
வட மெசிடோனியாயில் எஸ்ஜன் அலியோஸ்கி 57ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
பார்க்கென் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், டென்மார்க் மற்றும் பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
குழு ‘பி’யில் நடைபெற்ற இப்போட்டியில், பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் பெல்ஜியம் அணி சார்பில், தோர்கன் ஹசார்ட் 54ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கெவின் டி பிரையன் 70ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
டென்மார்க் அணி சார்பில், யூசப் போல்சென் போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஆம்ஸ்டர்டம் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து அணியும் ஆஸ்திரியா அணியும் மோதிக்கொண்டன.
குழு ‘பி’யில் நடைபெற்ற இப்போட்டியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் நெதர்லாந்து அணி சார்பில், மெம்பிஸ் டி பே போட்டியின் 11ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை செலுத்தினார்.
டென்செல் டம்பிரைஸ் 67ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.