நாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்படி அஸாம் மாநிலத்தில் 20 கிலோமீற்றருக்கு தொலைவில் இரட்டை வழிச்சாலை திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர 11 இதர சாலைகளையும் அவர் திறந்துவைத்துள்ளார்.
இதன் மூலம் இராணுவ வீரர்களுக்கு தேவையான தளவாடங்கள், உணவு, மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.