கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அல்லாதவர்களுக்கு இந்த மாத இறுதியில் ஜேர்மனி தனது எல்லைகளை மீண்டும் திறக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜூன் 25ஆம் திகதி தொடங்கி, ஐரோப்பிய ஒன்றியம் அல்லாதவர்கள் சுற்றுலா அல்லது பல்கலைக்கழகத்தில் படிப்பது போன்ற எந்த காரணத்திற்காகவும் ஜேர்மனியில் நுழையலாம் என்று உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது, விதிவிலக்கான காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் பயணிகள் வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே ஐரோப்பிய மருந்துகள் முகவரத்தின் ஒப்புதல் அளித்த தடுப்பூசி மூலம் தடுப்பூசி போட வேண்டும்.
எவ்வாறாயினும், கொரோனா வைரஸின் பரவல் பரவியுள்ள நாடுகளின் பயணிகள், தடை செய்யப்படுவார்கள்.
சமீபத்திய வாரங்களில் ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐரோப்பாவில் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் ஜேர்மனி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ளது.