நாட்டில் 3,964 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளும் 192 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மெக்ஸிகோவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து அங்கு தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,475,705 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 231,151 ஆகவும் அதிகரித்துள்ளன.
மேலும் நோயாளிகளின் உண்மையான எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் உண்மையான இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை விட குறைந்தது 60% ஆக இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.



















