பெல்ஜிய நகரமான அண்ட்வெர்பில் பாடசாலைக் கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கட்டிடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து வீழ்ந்ததாகவும் இதனை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் எடுத்துள்ளதாகவும் உளூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் போர்த்துக்கல் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் பெல்ஜிய ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
மேலும் கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் மூன்று பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.