கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து ஆயிரத்து 389ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 996 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனையடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 534 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.