வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்களுக்கு மத்தியில் எத்தியோப்பியர்கள் முக்கிய தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், பிரதமர் அபி அகமதுவின் முதல் தேர்தலை எதிர்கொள்கிறார்.
கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் 547 இடங்களில் பெரும்பான்மையை வெல்வதன் மூலம் மக்கள் ஆணையைப் பெறுவார் என்று பிரதமர் அபி அகமது நம்புகிறார்.
ஆனால், நவம்பர் முதல் இராணுவம் ஒரு பிராந்திய சக்தியுடன் போராடி வரும் டைக்ரேயில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கவலைகள் மற்றும் தளவாட சிக்கல்கள் காரணமாக நாட்டின் வேறு சில பகுதிகளிலும் வாக்களிப்பு தாமதமாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக, சுமார் ஐந்தில் ஒரு தொகுதியில் தேர்தல்கள் இப்போது நடைபெறாது.
முதலில் பொதுத் தேர்தல், ஒகஸ்ட் 2020ஆம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது.
ஆரம்ப தேர்தல் கால அட்டவணையின் கீழ், தேர்தல்களின் ஐந்து நாட்களுக்குள் தொகுதிகளின் ஆரம்ப முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன, அதே நேரத்தில் இறுதி சான்றளிக்கப்பட்ட முடிவுகள் 23 நாட்களுக்குள் அறிவிக்கப்பட உள்ளன.