அம்பாறை- சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியிலுள்ள வயல்வெளியில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறைச்சி கடை சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதான உபாலி என அறியப்படும் ஜாபீர் என்பவரே இவ்வாறு நேற்று (திங்கட்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபை கட்டடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியிலேயே இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், போதைப்பொருள் பாவனை பழக்கம் உள்ளவர் எனவும் கடந்த காலங்களில் இவ்வாறு போதைப்பொருள் மூலம் நிதானமிழந்து வீதிகளில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.