புதுச்சேரியில் அமுலில் உள்ள தளர்வுகளுடனான ஊரடங்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை சாலை மற்றும் பூங்காக்களில் காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறுதி சடங்கில் 20 பேரும் பங்கேற்கலாம் எனவும், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்களுடன் நடத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.