கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘கொரோனாவுக்கு எதிரான போரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பயணம் துவங்கியுள்ளது.
நாடு முழுதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியாவை போன்ற மக்கள்தொகை உடைய நாட்டில் இலவசமாக தடுப்பூசி வழங்குவது மிகப் பெரிய முடிவு.
சர்வதேச யோகா தினத்தில் இந்த மிகப்பெரிய திட்டம் நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு விரைவில் சாத்தியமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.