கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் ஒரு இலட்சத்து 582பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை 39இலட்சத்து 68ஆயிரத்து 405பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 23ஆயிரத்து 239பேர் பாதிக்கப்பட்டதோடு 648பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 81ஆயிரத்து 876பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 855பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 36இலட்சத்து 85ஆயிரத்து 947பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.