நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள தான் மிகவும் தயாராக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறைபாடுடையவை என கூறினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என்பதனால் சபாநாயகர் தேவைப்பட்டால், அதில் தொழில்நுட்ப பிழை இருப்பதாக கூறி அதை நிராகரிக்க முடியும் என்றும் கூறினார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்படும் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக எத்தனைபேர் வாக்களிக்கின்றார்கள் என்பதை காண ஆவலாக இருப்பதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
மேலும் தன்னை பதவி விலகுமாறு தெரிவித்த ஆளும்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசதிற்கு ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த முடிவை சவால் செய்ய அவருக்கு வலிமை எங்கிருந்து வந்தது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.