அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய இந்த பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை இன்று (செவ்வாய்க்கிழமை) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணியை நடத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்திலிருந்து நாடாளுமன்றம் வரை இந்த வாகன பேரணி பயணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சரே பொறுப்பு என குற்றம் சாட்டி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.