ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி விலகவுள்ளள்ள நிலையில் 60 வயதான இப்ராஹிம் ரைசி இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ஈரான் அணுவாயுத சோதனைக்கு பல ஆண்டு காலமாக அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விடயத்தில் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்படும் நிலையில், இப்ராஹிம் ரைசி, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இந்த விடயம் குறித்து தான் ஜோ பைடனுடன் ஆலோசிக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் பிராந்திய போராளிகளுக்கு அதன் ஆதரவு குறித்த பிரச்சினைகளை பேச்சுவார்த்தைக்குட்பட்டது என்றும் இப்ராஹிம் ரைசி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இப்ராஹிம் ரைசியின் கருத்து தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.