கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏனைய பிறழ்வுகளைவிட மிகவும் கடுமையானது என சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸின் வெவ்வேறு வகைகளுக்கு எதிராக ஒவ்வொரு தடுப்பூசியினதும் செயல்திறனின் அளவைக் கண்டறிய ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சினோபார்ம், ஃபைசர், ஸ்பூட்னிக் வி மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றின் அவசர பயன்பாட்டிற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து, அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் தற்போது இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான செயல்திறனைக் கொண்டுள்ளன என பொதுவாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனினும் வெவ்வேறு மாறுபாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு தடுப்பூசியினதும் செயல்திறனின் அளவைக் கண்டறிய ஆராய்ச்சி பணிகள் நடந்து வருவதாக உயர் தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.