ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளார்.
இதற்கமைய அவர் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு உரை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய சுகாதார நிலைமை, கொரோனா நிலைமை மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் இந்த உரையில் தெரிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.