யாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நிதியுதவியின் ஊடாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென கூறப்படுகின்றது.
மேலும் இந்த தொழிற்சாலை ஊடாக குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு, கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இந்த தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.