விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், சிறைச்சாலை வாகனத்தின் ஊடாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 15 பேரும், அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பேருந்து ஊடாக சொந்த ஊர்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.