ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ச எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா சென்றிருந்த பஷில் நேற்று நாடு திரும்பிய நிலையில், சுயதனிப்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும், இணையம் ஊடாக முக்கிய சந்திப்புகளை கட்சி செயற்பாட்டாளர்களுடன் அவர் நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது நாடாளுமன்ற பிரவேசம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய பஷில் எதிர்வரும் 6ஆம் திகதி பதவியேற்க வேண்டும் என அவருக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னரே பஷில் நாடாளுமன்றம் வரவேண்டும் என மேலும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஷில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி துறக்கவுள்ளதாகவும், பஷிலுக்கு பொருளாதார விவகார அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.