கொரோனா வைரஸ் தொற்றுகளின் அதிகரிப்புக்கு மத்தியில், உட்புற பகுதிக்குள் முகக்கவசம் அணியும் கட்டாய தேவையை இஸ்ரேல் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் நாட்டில் யாருமே கொவிட்-19 தொற்றினால் பாதிப்படையாதிருந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு 100க்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிப்படைவது கவலைகளை அதிகரித்துள்ளது.
நாட்டில் பதிவாகியுள்ள பெரும்பாலான தொற்றுகள் வெளிநாட்டு டெல்டா கொவிட் மாறுபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தொற்றுநோயைக் கையாள்வதில் இஸ்ரேல் உலகின் மிக வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாகும். இது மிக விரைவான தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்தியது.
இதன் கீழ் 9.3 மில்லியன் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓரளவு அல்லது முழுமையாக நோய்த்தடுப்பு மருந்தினை செலுத்தியுள்ளனர்.