அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டின் நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை முதல் சிட்னியில் இரண்டு வார முடக்க கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
வைரஸின் இந்த திரிபு ஆபத்தாக இருப்பதால், அடுத்த சில நாட்களில், இன்று நாம் கண்டதை விட நோயாளிகளின் எண்கள் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று நியூஸ் சவுத் வேல்ஸ் முதலவர் அறிவித்துள்ளார்.
எல்லை கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி, உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அவுஸ்ரேலியா வெற்றி கண்டுள்ளது.
தற்போது அங்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை 30,450 ஆகவும் 910 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.
ஆனால் சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வரும் சிறிய அதிகரிப்பு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க காரணமாக அமைந்துள்ளது.
ஆகவே இரு வாரங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கும், வேலை, கல்வி, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ பராமரிப்புக்காக மட்டுமே வீட்டை விட்டு மக்கள் வெளியேற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.