நாட்டில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள பணியாளர்களுக்கு குறித்த நாடுகளினால் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.