தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியலாலங்களில் 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 44 ஆயிரத்து 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நடைமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் கடந்த 20ஆம் திகதி வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.