கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 158 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றினால் இதுவரையில் 2 ஆயிரத்து 905 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.