நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து, மிகவும் கஷ்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.
லண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய நிருவாகத்தின் அனுசரணையில் அகிலன் பவுன்டேசனால், மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பகுதியில் வாழும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதாவது யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட குடும்பத்துக்கும் கொவிட் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கும் 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் 100 குடும்பத்துக்கு வழங்கப்பட்டன.