இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 46 ஆயிரத்து 643 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 2 இலட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 93 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 5 இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 981 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது.