இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 37 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 3 இலட்சத்து 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 93 இலட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 5 இலட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று 907 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து 97 ஆயிரத்தை கடந்துள்ளது.