கிளர்ச்சிப் போராளிகள் பிராந்திய தலைநகர் மெக்கெல்லினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் டைக்ரே பிராந்தியத்தில் போர்நிறுத்தத்தை எத்தியோப்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பட்டாசுகளை கொளுத்தியும் கொடிகளை அசைத்தும் தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டியுள்ளனர்.
டைக்ரே கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றி எட்டு மாதங்கள் கடந்துள்ளது.
இருப்பினும் எத்தியோப்பிய அரசாங்கம் நகரத்தின் இழப்பையும் தனது துருப்புக்கள் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்தும் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
குறித்த யுத்தம் காரணமாக 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாகவும் சுமார் 350,000 பேர் பஞ்சத்தை எதிர்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
மேலும் இந்த மோதல்களினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மனித உரிமை மீறல்கள் இரு தரப்பிலும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.