மும்பையில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் எதிர்ப்புத் திறன் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி மும்பையில் 50 சதவீத குழந்தைகளுக்கு ஏற்கனவே கொவிட் தொற்று ஏற்பட்டுவிட்டது. தற்போது ஒன்று முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 51.18 சதவீதம் குழந்தைகளுக்கு கொவிட் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
தற்போதைய ஆய்வில் 10-14 வயதுடையவர்களில் 53.43 சதவீதமானோருக்கும் 1-4 வயதுடையவர்களில் 51.04 சதவீதமானோருக்கும் கொவிட் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளது. இது மிகவும் அதிகம்.
இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவது வெகுவாக குறைவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.