இந்தியாவில் டெல்டா பிளஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் இதுவரை 10 பேர் குறித்த வைரஸ் தொற்றாளர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், “கொரோனா தொற்று அதிகம் பாதித்து பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் ஆயிரக்கணக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பெங்களுர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
பரிசோதனை முடிவில் ஏற்கனவே ஒன்பது பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் 10 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். மற்ற அனைவரும் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார்.