மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த தடை நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்தார்.
அதற்கமைய கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் COVID-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) ஆகியவற்றின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றவர்களுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை நேற்று அறிவித்தது.
அதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்தவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.