ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தற்போது உள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடைபெறவுள்ளது.
தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தின்போது ஊரடங்கை நீட்டிப்பது, புதிய தளர்வுகளை அறிவிப்பது, நோயை முழுமையாக கட்டுப்படுத்தவும், மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மருத்துவ நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமைய ஊரடங்கு குறித்த தீரமானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.