மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் மொத்தமாக 20இலட்சத்து 530பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை 25இலட்சத்து 19ஆயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு இலட்சத்து 33ஆயிரத்து 47பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 105பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 244பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 85ஆயிரத்து 692பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 798பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.