அமெரிக்க நிறுவனத்தின் 26,000 டோஸ் அடங்கிய பைசர் கொரோனா தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய மூடாக இன்று அதிகாலை குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு செலுத்திடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
தெற்காசிய நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மிகுதி 1 இலட்சத்து 74 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.