ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரஃபேல் போர் விமான கொள்வனவில் முறைக்கேடு இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடைபெறவில்லை எனத் தீர்ப்பளித்தது.
இதற்கிடையில் ரஃபேல் ஒப்பந்தத்திற்காக இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு 9 கோடிக்கு மேல் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.